காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகள் பற்றி திருப்தியடைய முடியாது - ஜாதிக்க ஹெல உறுமய - Sri Lanka Muslim

காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகள் பற்றி திருப்தியடைய முடியாது – ஜாதிக்க ஹெல உறுமய

Contributors

போதைப்பொருட்கள் அடங்கிய 2 கொள்கலன்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளும் விசாரணைகள் பற்றி திருப்தியடைய முடியாது என்று ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இதுதொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்ள வலியுறுத்தி காவல்துறை மாஅதிபருக்கு, ஹெலஉறுமய மனுவொன்றை கையளித்துள்ளதாக அதன் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் தொகையை விடுவிக்கக் கோரி பிரதமரின் இணைப்புச் செயலாளருக்கும் மனுவொன்று அளிக்கப்பட்டிருந்தது.

இதனால், தமது பதவிலிருந்து விலகி  காவல்துறையின் விசாரணைகளுக்கு பிரதமர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சோபித்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.

போதைப்பொருட்கள் கடத்தல் பற்றி காவல்துறையினர் தற்போது முறையான விசாரணை முன்னெடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team