காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம் » Sri Lanka Muslim

காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்

gaza

Contributors
author image

Editorial Team

(BBC)


காஸாவில் பாலத்தீன போராட்டாக்காரர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திங்களன்றுஉயிரிழந்த 58 பேரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

2014ஆம் ஆண்டு போருக்கு பிறகு நடைபெற்ற கொடுமையான தாக்குதல் இதுதான்.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்ததை குறிக்கும் `நக்பா` என்று பாலத்தீனர்களால் அழைக்கப்படும் நிகழ்வின் 70ஆவது ஆண்டு நிறைவோடு இது ஒத்துப் போகிறது.

செவ்வாயன்று மேலும் சில முற்றுகைகளுக்கு தயாராகிக் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறந்த நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.

மொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.

காஸாவில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்கு: தொடரும் பதற்றம்படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTEPA

தூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்றார்.

திங்களன்று நடைபெற்ற வன்முறையில் 2,700 கொல்லப்பட்ட்தாக பாலத்தீனம் கூறுகிறது. மேலும் இது ஒரு படுகொலை என பாலத்தீனம் தெரிவித்துள்ளத.

காஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

எல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.

பாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை எதிர்கால பாலத்தீன ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர். ஆனால், ஜெரூசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்தது.

ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் இஸ்ரேல் தனது படையை பயன்படுத்தியதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka