காஸா போரில் இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது - மனித உரிமைகள் கண்காணிப்பகம் - Sri Lanka Muslim

காஸா போரில் இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Contributors
author image

World News Editorial Team

காசாவுக்கு எதிரான யுத்தத்தின் போது இஸ்ரேலிய இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து 50 நாட்கள் வரையில் காசாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் இடம்பெற்றன.

 

இதில் 2100 பாலஸ்த்தீனியர்களும், 73 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

 

பாலஸ்த்தீனத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த யுத்தத்தின் முக்கிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் தாம் விசாரணை நடத்தியதாகவும், அதில் இஸ்ரேல் படையினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளமை புலனாகி இருப்பதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்பட்ட பாடசாலை மற்றும் நிவாரண முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் இதற்கு எடுத்துக் காட்டப்படுகிறது.

 

எவ்வாறாயினும் இந்த யுத்தம் குறித்து ஏற்கனவே யுத்தக் குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான இராணுவக் குழு ஒன்றை நியமித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

 

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட ஐந்து சம்பவங்கள் தொடர்பில் இந்த குழு விசாரணை செய்யும் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது. (sfm)

Web Design by Srilanka Muslims Web Team