காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு இனப்படுகொலை: ஐ.நா.வில் பாலஸ்தீனம் கண்டனம் - Sri Lanka Muslim

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு இனப்படுகொலை: ஐ.நா.வில் பாலஸ்தீனம் கண்டனம்

Contributors
author image

World News Editorial Team

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒரு இனப்படுகொலை என ஐ.நா. சபையில் பாலஸ் தீனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் உள்ள காஸா முனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் மீது காஸா தீவிரவாதிகள் ராக்கெட் வீச்சு நடத்தினார்கள்.

 

50 நாட்கள் நடந்த போரில் 2100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 73 இஸ்ரேலியர்கள் பலியாகினர். தற்போது பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் நேற்று பேசினார். அப்போது அவர் காஸா மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேசியதாவது:–

 

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் இதற்கு முன் நடந்த போரை விட அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த போரைவிட தற்போது போர்க்குற்றம் இழைக்கப்பட்டுள்ளது.

 

போரின்போது நடந்த நிகழ்வுகளை உலகம் முழுவதும் அனைத்து கண்கள் பார்த்தன. காதுகள் கேட்டன. கடந்த 1967–ம் ஆண்டில் பாலஸ்தீனத்தின் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளை போர் மூலம் இஸ்ரேல் கைப்பற்றியது.

 

‘‘தற்போது பாலஸ்தீனத்தின் காஸா மீது நடந்த போர் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையாகும்’’ என்றார்.

 

அவரது பேச்சுக்கு இஸ்ரேல் வெளியுறவு மந்திரி அவிக்டோர் விபர்டின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது பேச்சு முழுவதும் பொய்யினால் தயாரிக்கப்பட்ட உரை என்றார். அவரது பேச்சுக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team