காஸா முக்கியச்செய்திகள் ! - Sri Lanka Muslim
Contributors

-அபூஷேக் முகம்மட்-

 

1.காஸா – இஸ்ரேலிய யுத்தம் நேற்றிரவு மக்கா நேரம்
ஏழு மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.

 

2.காஸா மக்கள் மட்டுமன்றி முழு பலஸ்தீனும் இன்னும் பல நாடுகளிலும் இந்த போர் நிறுத்தம் பலஸ்தீனப் போராட்டத்தின் ஒரு வெற்றியாக, முக்கியமானதொரு மைல்கல்லாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் .

 

1.- தாக்குதல்களை நிறுத்துதல்

2- காஸா மீதான முற்றுகையை நீக்குதல்

3- மனிதாபிமான மற்றும் கட்டுமானத்துக்கு தேவையான
உதவிப் பொருட்களை உடனடியாக உட்செல்ல அனுமதித்தல்

என்ற விஷயங்கள் உடன்பாட்டில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளன.

 

போராளிகளின் அடுத்த கோரிக்கைகளான

1.- விமான நிலையம்

2- துறைமுகம்

3- இந்தப் போரின் போதும் அதற்கு முன்னரும்
இஸ்ரேலினால் பிடிக்கப்பட்ட கைதிகளின் விவகாரம்

 

என்ற மூன்று அம்சங்கள் குறித்தும் இந்தப் போர் நிறுத்தம் எந்தளவுக்கு வெற்றிகரமாக முன்கொண்டு செல்லப்படுகிறது என்பதைப் பொருத்து இன்னும் ஒரு மாத காலத்துக்குள் முடிவு எட்டப்படும்.

 

நினைவில் கொள்ள வேண்டிய அம்சங்கள் :

 

1.இஸ்ரேல் வாக்குறுதியைக் காப்பாற்றிய வரலாறுகள் அரிது என்பதால் அதற்கான பொறுப்பை எகிப்து தான் ஏற்க வேண்டுமென பலஸ்தீன் தரப்பு சொல்லிவிட்டது.

 

2.இந்த உடன்பாட்டை சாத்தியப்படுத்துவதில் கட்டார் பெரும் பங்காற்றியது என அப்பாஸ் குறிப்பிட்டார். அதற்காக வேண்டி ஜோன் கெரிக்கும் கட்டாருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

 

3.அதே நேரம் அடுத்த வாரம் கட்டாரை இஸ்ரேலிய சட்டசபையில் தன் எதிரியாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் பிரேரனை கொண்டு வரப்படவுள்ளது.

 

4.இந்த நிலையில் இனி ஹமாஸ் காஸாவினுள் ஏவுகணை தொழிற்சாலையை நிர்மாணிப்பதை எங்களால் எந்த வகையிலும் தடுக்க முடியாது என இஸ்ரேலிய தரப்பினர் புலம்புகின்றனர்.

 

5.வரலாற்றில் அரபு நாட்டுப் படைகளால் சாதிக்க முடியாததை காஸா போராளிகள் இறை அருளால் சாதித்தனர். காஸா எகிப்தின் ஆளுகைக்குள் இருந்த போது அதைக் கைப்பற்ற அரை மணி நேரம் இஸ்ரேலுக்கு போதுமாக இருந்தது என்பது கசப்பான வரலாறு.

 

6.இன்று காஸா கண்ணியமாக தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும்….

 

7.அடுத்து,ஆட்சியில் இருந்த ஒரே வருடத்துக்குள் போராளிகள் இந்த இராட்சதப் பலத்தைப் பெற தன்னாலான உதவிகளை தந்த இந்த மனிதருக்கு நன்றி சொல்ல வேண்டும்…

Web Design by Srilanka Muslims Web Team