கிண்ணியாவில் மொபைல் Appsயின் மூலம் உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்கு கணிப்பீடு ஆரம்பம். » Sri Lanka Muslim

கிண்ணியாவில் மொபைல் Appsயின் மூலம் உள்ளூராட்சி சபை தேர்தல் வாக்கு கணிப்பீடு ஆரம்பம்.

news

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

உள்ளூராட்சி தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அதுவும் கிண்ணியாவில் இருந்து அறிமுகமாகும் இந்த மொபைல் App தொழில்நுட்பத்தினை ஆரம்பகட்டமாக கிண்ணியா நகர சபை உள்ளூராட்சி  தேர்தலில் இன்று 1/8/2018 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  மக்களின் வாக்குகளை மொபைல் அப்பின் மூலம் அளித்து உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு முன்பாக வெற்றியாளர்களை இனங்கண்டுகொள்ளும் ஒரு செயற்திட்டம்.

இந்த மொபைல் Apps செயத்திட்டமானது வளர்ந்துவரும் Zcompany  மென்பொருள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் நாடு முழுவதும் இந்த செயத்திட்டத்தினை செயற்படுத்தி இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று கிண்ணியாவை சேர்ந்த Zcompany நிறுவுனர் முகம்மது சபீக் முகம்மது சாதிர் தெரிவித்துள்ளார்.

இந்த appஐ downlaod செய்வதற்கான PlayStore Link : https://goo.gl/cfKWJJ

Web Design by The Design Lanka