கிண்ணியா தள வைத்திய சாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை: மக்கள் அவதி » Sri Lanka Muslim

கிண்ணியா தள வைத்திய சாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை: மக்கள் அவதி

h666

Contributors
author image

Hasfar A Haleem

இன்று(11) காலை வைத்திய சாலைக்கு சென்ற போது பதிவு துண்டு தரும் அறை பூராகவும் மக்களாக காண கிடைத்தது.பதிவு துண்டு கேட்டதுக்கும் பதிவு துண்டும் தர மறுத்து விட்டார்கள். காரணம் கேட்டதுக்கு ஒரு வைத்தியர்தான் கடமை ஆற்றுகிறாம்அவரால் மட்டும் எல்லோரையும் பார்க்க முடியாதாம்.

மற்றவர்கள் எங்கே என்று கேட்ட போது எங்களுக்கு அதல்லாம் தெரியாது என்கிறார்கள். இந்த வைத்திய சாலைக்கு கடமையாற்றுவதற்கு வைத்தியர்கள் நியமிக்கப் பட வில்லையா இல்லை இருந்தும் கடமை பார்க்க மறுக்குறார்களா.?

இவர்களின் பிரச்சனையால் மக்கள் அவஸ்தை படுகிறார்கள். இதனை யார்தான் கண்டு கொள்வது..? என இன்று வெளிநோயாளர் பிரிவுக்கு மருந்து எடுக்கச் சென்ற ஒருவர் பலனின்றி வீடு திரும்பிய போது ஊடகத்துக்கு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நோயாளர்களை குறித்த வைத்திய பொருளைக் கொண்டு சோதனை செய்யாமல் என்ன வருத்தம் என்று மட்டுமே கேட்டு விட்டு மருந்துகளை அவசரமாக துண்டில் எழுதிக் கொடுக்கின்றனர் மற்றும் நோயாளர்களை வெறுப்புடனே இங்குள்ள வைத்தியர்கள் சீறிப்பாய்கின்றனர்.

இது தொடர்பாக பல தடவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இனியாவது இது தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா இல்லாது போனால் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் திருகோணமலை கிண்ணியாவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயம் தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் மேலும் கேட்டுக் கொள்கின்றனர்.

h h-jpg2

Web Design by The Design Lanka