கிண்ணியா நகர சபை ஐக்கிய தேசியக் கட்சி வசமானது: தவிசாளராக எஸ்.எச்.எம்.நளீம் » Sri Lanka Muslim

கிண்ணியா நகர சபை ஐக்கிய தேசியக் கட்சி வசமானது: தவிசாளராக எஸ்.எச்.எம்.நளீம்

20180411_094947

Contributors
author image

Hasfar A Haleem

உள்ளூராட்சி மன்ற தேர்தலினை முன்னிட்டு கிண்ணியாவின் நகர சபையின் முதல் சபை அமர்வு இன்று காலை 09.00 மணிக்கு(11) கிண்ணியா நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் நடைபெற்ற இச் சபை அமர்வின்போது பகிரங்க வாக்கெடுப்பின் மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் எஸ்.எச்.எம்.நளீம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இவ் வாக்கெடுப்பின்போது தவிசாளருக்கு ஆதரவாக 09 வாக்குகளும் எதிராக மூன்று வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக மூன்று வாக்குகளும் ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்,ஐக்கிய தேசிய கட்சி,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி சேர்ந்து ஒன்பது வாக்குகளும் அளிக்கப்பட்டன நல்லாட்சிக்கான தேசிய முன்னனி உறுப்பினர் இவ் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

மொத்தமாக இச் சபை 13 உறுப்பினர்களைக் கொண்டு தவிசாளர்,பிரதி தவிசாளர் உட்பட உறுப்பினர்களைக் கொண்டு இயங்கவுள்ளது.

இரண்டாம் கட்டமாக பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்காக பகிரங்க வாக்களிப்பு இடம் பெற்றது இதில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸை சேர்ந்த ஐயூப் நளீப் சப்ரீன் ஒன்பது வாக்குகள் ஆதரவாகவும் மூன்று வாக்குகள் எதிராகவும் இடம்பெற்று பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

20180411_094947 IMG-20180411-WA0000 IMG-20180411-WA0008

Web Design by The Design Lanka