கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு..! - Sri Lanka Muslim

கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பு..!

Contributors

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா கண்டி பிரதான வீதியில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

இரவு பகல் வேளைகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் வீதியை அசுத்தப்படுத்தி நடமாடீத்திரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கட்டாக்காலி மாடுகளினால் வீதி விபத்துக்கள் மற்றும் வீதியினை அசுத்தமாக்குதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வாகனங்கள் செல்லுகின்ற போதும் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்கின்ற போதும் கட்டாக்காலி மாடுகள் நடு வீதியில் படுத்துக்கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கடைகளில் உள்ள மரக்கறிகள் மற்றும் பலாப்பழம் போன்ற பழ வகைகளையும் இவ் கட்டாக்காலி மைடுகள் மேய்ந்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர். 

இவ்கட்டாக்காலி மாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக கிண்ணியா பிரதேச சபை மற்றும் அப்பகுதி பள்ளிவாயல்களில் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இது வரை மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team