கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு: இன, மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டது » Sri Lanka Muslim

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு: இன, மத நல்லிணக்கத்திற்கு வித்திட்டது

i.jpg2

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் இப்தார் நிகழ்வு இன்று (18) பொறுப்பதிகாரி விஜயசிரி தலைமையில் நடைபெற்றது.

இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு பொலிஸ் பெரும்பான்மை உயரதிகாரிகள் மற்றும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி டாக்டர் ஹில்மி மஹ்ரூப் உட்பட இவ் இப்தார் வைபவத்தில் திருகோணமலை மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ,சீனக்குடா ,மூதூர்,சம்பூர் போன்ற பொலிஸ் அதிகாரிகள் கிண்ணியா உலமா சபை,சூறா சபை,சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மூவினங்களுக்கிடையில் இன மத நல்லிணக்கத்திற்கான ஒரு அத்திவாரமாகவும் இது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிண்ணியா உலமா சபையின் கிண்ணியாக் கிளை செயலாளர் ஆரிப் மௌலவியினால் சிங்கள மொழியில் பயான் நிகழ்த்தப்பட்டமையும் மேலும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

i i.jpg2 i.jpg2.jpg3

Web Design by The Design Lanka