கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கு பிரதியமைச்சர் புஞ்சிநிலமே வருகை - Sri Lanka Muslim

கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவுக்கு பிரதியமைச்சர் புஞ்சிநிலமே வருகை

Contributors
author image

ரைஸ்

இம்மாதம் 9 ஆம் திகதி வெகுவிமர்சையாகவும் மிக கோலாகலமாகவம் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர்     ஹில்மி மஹ்ரூப் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவினை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று வருகை தந்திருந்தார்.

 

இதன்போது பிரதியமைச்சர் இம்மாதம் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட மரக்கறி சந்தைக்கட்டடத் தொகுதி, ரஹ்மானியா சிறுவர் பூங்கா, கட்டையாறு பெரியாற்றுமுனை கடற்கரை வீதி, கிண்ணியா பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டதோடு நகரபிதாவுடன் முக்கிய சந்திப்பிலும் கலந்து கொண்டார்.

 

குறித்த சந்திப்பில் நகரபிதாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிலவற்றுக்கான தீர்வினையும் பெற்றுத்தருவதாக பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நம்பிக்கை தெரிவித்ததோடு உடனடியாக சில கோரிக்கைகளை செய்து தருவதாக குறித்த சந்திப்பில் தெரிவித்ததாகவும் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் குறிப்பிட்டார். இதன்போது பிரதியமைச்சர், நகரபிதா இவர்களுடன் முக்கிய பிரமுகர்கள் ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

05

 

06

 

07

Web Design by Srilanka Muslims Web Team