கிண்ணியா, முல்லைத்தீவில் மழை வேண்டி பிரார்த்தனை! - Sri Lanka Muslim

கிண்ணியா, முல்லைத்தீவில் மழை வேண்டி பிரார்த்தனை!

Contributors

-ஏ.எம்.ஏ.பரீத்-

கிண்ணியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களில் மழை வேண்டி பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன. கிண்ணியா ஜம்இய்யத்துல் உலாமாவின் வேண்டுகோளின் பேரில் இந்த பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன.

கிண்ணியாப் பிரதேசத்தில் தற்போது கடும் வரட்சி நிலவுகின்றது. இதனால் நெற் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்தே மழை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு கிண்ணியா ஜம்இய்யத்துல் உலாமா அறிவித்துள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு, ஹிஜ்ராபுரம் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மழை வேண்டி தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team