கிண்ணியா வைத்தியசாலைக்கும் தரம் உயர்வு கிடைக்குமா?ஏமாற்றமடைவோமா? » Sri Lanka Muslim

கிண்ணியா வைத்தியசாலைக்கும் தரம் உயர்வு கிடைக்குமா?ஏமாற்றமடைவோமா?

HOSPITAL

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா தளவைத்தியசாலையின் அண்மைய போராட்டங்கள் நியாயமானது.

டெங்குவினால் பல உயிர்கள் போனமை தொடர்பாாக நாடறிந்த உண்மை என்பதனை விடவும் நாட்டின் ஜனாதிபதியே கிண்ணியாவுக்கு வந்து வைத்தியசாலை விடயத்தில் தான் தரம் உயர்த்தித்தருவதாகவும் உறுதியளித்ததை மாயாலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தற்போது மூதூர் வைத்தியசாலை ஏ தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதையிட்டும் நாங்கள்சந்தோஷமடைகிறறோம். இருந்த போதிலும் எம் இளைஞர்களினால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் பல முன்னெடுப்புக்களை எம் ஊர்சார்பாக பொதுமக்கள் பல அமைப்புக்கள் சேர்ந்து பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அதில் முக்கியமான பிரதானமானவொன்றாகவும் டெங்கு தீவிரமடைந்ததும் போராட்டங்கள் மூலமான உணர்வுகளை வெளிப்படுத்தியோதிலும் இற்றை வரைக்கும் கிண்ணியா தளவைத்தியசாலை தரமுயர்வு தொடர்பாக உரியவர்கள் இன்னும் கண்டு கொள்ளாமையையிட்டு வருத்தமடைகிறோம்.

இப் போராட்டத்தின் போதும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்திருந்தனர்கள் என்பதும் ஊரறிந்த உண்மை .

அப்போது கூட திடீர் விஜயமொன்றின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிண்ணியா வைண்தியசாலை விடயம் தொடர்பில் உறுதியளித்துச் சென்றும் கூட அதற்கான ஏற்பாடுகளை பூரணமாக்குவதற்கு சாத்தியப்பாடுகள் எவ்வளவு முன்னெடுப்புக்களை எமது அரசியல் தலைமைகள் இவ்விடயத்தில் கரிசனை காட்டினார்களோ தெரியவில்லை .

எதுவாக இருந்தாலும் மாகாண ,மத்திய அரசில் அங்கம் வகிப்போர் சுகாதார அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கின்றனர் அது தவிர கிண்ணியாவில் ஒருவர் கூட மத்திய சுகாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளராகவும் இருக்கின்ற போதிலும் கிண்ணியா தளவைத்தியசாலை விடயத்தில் இப்படியான இழுத்தடிப்புக்கள் மக்களை இவர்கள்ஏமாற்றுகிறார்கழளா? என்பது கூட புரியாத புதிராகவே இருக்கின்றது.

இளைஞர்களின் போராட்டத்தில்பங்கெடுத்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இவ்விடயம் தொடர்பில் உங்களுடைய பங்களிப்புக்கள் இருந்த போதிலும் இது வரைக்கும் கிண்ணியா தளவைத்தியசாலை புறக்கணிப்புக்கு தடையாக இருக்கிறார்களளா? மக்களின் ஏமாற்றம்தொடருமா?

கிண்ணியா தளவைத்ணியசாலை தரமுயர்வு கிடைக்கா விட்டால் மீண்டும் எமது போராட்டங்கள் தொடரும் கிண்ணியாக்காரனின்வபோராட்டங்கள் நாட்டுக்குஎடுத்துக்காஎட்டாக அமைக்க நேரிடும்என்பதைமயும் மறக்க முடியாது.

Web Design by The Design Lanka