கிந்தோட்டை ஸாஹிராவில் நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

கிந்தோட்டை ஸாஹிராவில் நூல் வெளியீட்டு விழா

kalaivathi-kaleel66

Contributors
author image

M.S.M.ஸாகிர்

ஏ.எல்.பாறூக் எழுதிய அல்-குர்ஆனும் நவீன விஞ்ஞானமும் என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு காலி, கிந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலை யில் நடைபெறவுள்ளது.

பிரதம அதிதியாக நவமணி ஆசிரியர் பீடம் காவ்யாபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலீல் கலந்து சிறப்பிக்கிறார். கௌரவ அதிதிகளாக தினகரன் ஆசிரியர் பீடம் எம்.எஸ்.எம். பாஹிம் பட்டயக் கணக்காளர் எம்.என்.எம். நுவைப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பதியாக ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம்.ஏ.எம். நஸார் அழைக்கப்பட்டுள்ளார்.

விசேட அதிதிகளாக தென் மாகாணத் தமிழ்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் மதனியா கலீல் காலி வலய தமிழ்ப்பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். பாறூக், டாக்டர் ஏ.எல்.சாஜஹான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

Web Design by The Design Lanka