கிரான்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரை..! - Sri Lanka Muslim

கிரான்பாஸ் தீ விபத்தில் 50 வீடுகள் தீக்கிரை..!

Contributors

கொழும்பு, கிரான்பாஸ் கஜீமா தோட்டத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 2.40 மணியளவில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தில் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 50 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தில் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team