கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் அம்பாறையில் ! - Sri Lanka Muslim

கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் அம்பாறையில் !

Contributors

நூருல் ஹுதா உமர்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) அம்பாறையில் நடைபெற்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லோகான் ரத்வத்த, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் டவலியு.டி.வீரசிங்க, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திலக் ராஜபக்ஷ , கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், எம்.பிக்களின் இணைப்பாளர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022 இன் கீழ் வாழ்வாதார அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சூழல் மற்றும் பேன்தகு அபிவிருத்தி, சமூக நலனோம்புகை மற்றும் சமூக அபிவிருத்தி ஆகிய நான்கு பிரதான அபிவிருத்தி கருத்திட்டங்களை மையமாக கொண்ட வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு ஆராயப்பட்டன.

Web Design by Srilanka Muslims Web Team