கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சினுக்கு கோவில் - Sri Lanka Muslim

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சினுக்கு கோவில்

Contributors

கிரிக்கெட்டின் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருக்கு பீகாரில் போஜ்புரி நடிகரும், பாடகருமான மனோஜ் திவாரி கோவில் ஒன்றை கட்டியுள்ளார்.

பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள அட்டரவாலியா கிராமத்தில் சச்சினுக்கு அவர் கோவில் கட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 2011 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற போது நம் நாட்டுக்கு இந்த பெருமையை பெற்று தந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு கோயிலை கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதற்காக 6000 சதுரஅடி நிலத்தில் 2 ஆண்டுகளில் இந்த கோயிலை கட்டி முடித்து விட்டேன்.

கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் கோபுரத்தின் உச்சி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கையில் கிரிக்கெட் மட்டையுடன் சச்சின், டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முழு உயர பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

வரும் ஜனவரி மாதம் இந்த கோயிலை திறக்க திட்டமிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team