கிரெம்ளின் டென்னிஸ் ஹாலெப் சாம்பியன் » Sri Lanka Muslim

கிரெம்ளின் டென்னிஸ் ஹாலெப் சாம்பியன்

10

Contributors

மாஸ்கோ : கிரெம்ளின் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், ரோமானியா வீராங்கனை சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய ஹாலெப் 7,6 (7,1) என்ற கணக்கில் முதல் செட்டை போராடி வென்று முன்னிலை பெற்றார்.
அடுத்த செட்டில் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவர் 7,6 (7,1), 6,2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை கைப்பற்றினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் மிகைல் குகுஷ்கின் , ரிச்சர்ட் காஸ்கே (பிரான்ஸ்) மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சற்று தடுமாறிய காஸ்கே, பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி 4,6, 6,4, 6,4 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

Web Design by The Design Lanka