கிளிநொச்சியில் குளிக்கச்சென்ற 03பெண்கள் குளத்தில் மூழ்கி மரணம் - Sri Lanka Muslim

கிளிநொச்சியில் குளிக்கச்சென்ற 03பெண்கள் குளத்தில் மூழ்கி மரணம்

Contributors
author image

Farook Sihan - Journalist

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் சனிக்கிழமை நண்பகல் 3 மணியளவில் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள கந்தன்குளத்தில் இடம்பெற்றது.

 

கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (வயது 08) இவரது சகோதரியான ச.நவதாரணி (வயது 16) விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.துசாந்தினி (வயது 16) ஆகியோரே குளத்தில் உள்ள சகதியில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இவர்களது சடலங்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

 வரட்சி காரணமாக இப்பகுதி வீடுகளிலுள்ள கிணற்று நீர் வற்றியதாலேயே இவர்கள் குளத்தில் குளிக்கச்சென்று உயிரிழந்த பரிதாபம் நிகழ்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

32

 

33

34

Web Design by Srilanka Muslims Web Team