கிளிநொச்சி வைத்தியசாலை தீ விபத்து; டக்ளஸ் நேரில் விஜயம்! - Sri Lanka Muslim

கிளிநொச்சி வைத்தியசாலை தீ விபத்து; டக்ளஸ் நேரில் விஜயம்!

Contributors

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை (21) வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

கிளிநொச்சி மாவட்ட, பொது வைத்தியசாலையின், காச நோய் ஆய்வுகூடத்தில் நேற்று (20) இரவு திடீரென தீ பரவியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு, பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தீ விபத்தில் எவ்வித உயிர்ச் சேதங்களும் இடம்பெறவில்லையெனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team