கிளுகிளுப்பு சங்கத்தினால் மாவடிப்பள்ளியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..! - Sri Lanka Muslim

கிளுகிளுப்பு சங்கத்தினால் மாவடிப்பள்ளியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு..!

Contributors

மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய கல்முனை கிளுகிளுப்பு சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளியில் உள்ள பல வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது நாட்டில் பரவி வருகின்ற கொரோனா மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டு தனது அன்றாட வாழ்கை செலவை முன்னெடுத்துச் செல்ல முடியாது தனது வாழ்வாதாரத்தை இழந்த மாவடிப்பள்ளியிலுள்ள பல குடும்பங்களுக்கு இந்த பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை பிரதேசத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட் பல குடும்பங்களுக்கு இந்த அமைப்பினால் பல்வேறுபட்ட நிதிப்பங்களிப்புகள் வழங்கப்பட்டு வருகிவதோடு கொரோனா மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்ட மாவடிப்பள்ளி மக்களுக்கு முதல் முதலாக இவ்வமைப்பு ஊடாக பெறுமதி வாய்ந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

அத்துடன் இந்நிவாரண பொதிகளை எமது மாவடி பேர்ல்ஸ் கழகத்தின் ஊடாக மாவடிப்பள்ளி மக்களுக்கு சேர்க்க வேண்டும் என்பதற்காக பல பிரயத்தனங்களை மேற்கொண்ட கிளுகிளுப்பு அமைப்பு மற்றும் அதன் தலைவர் ஆசீர் அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு இந்நிவாரண பணிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தது நிதி உதவிகள் வழங்கிய அனைவருக்கும் எமது மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் சார்பில் பல கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் தொடராக எமது கழகத்தினால் இந்த நிவாரணப் பணிகளை முன்னேடுக்க திட்டமிட்டுள்ளோம் எனவே அதற்கு பங்களிப்பு செய்ய ஆர்வமுள்ள நலன் விரும்பிகள் பின்வரும் இலக்கங்களுடன் எம்மை தொடர்பு கொள்ளவும்.

மெளலவி ஏ.ஜே.எம்.அஸ்ரப் (B.A)
077 365 9557

எம்.எஸ்.எம்.சியாத்
077 232 6070

Web Design by Srilanka Muslims Web Team