கிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய நூல் வெளியீடு » Sri Lanka Muslim

கிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய நூல் வெளியீடு

b66

Contributors
author image

பைஷல் இஸ்மாயில்

கிழக்கின் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் அபிவிருத்தியை நோக்கிய பயணமும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் 2016 ஆம் அண்டில் இடம்பெற்ற அபிவிருத்திகள் பற்றிய பதிவுகள், சுனாமி ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் ஆயுர்வேதா நூல் வெளியீடும் நேற்று (26) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல்.எம்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு ஆயுர்வேதா நூலின் பிரதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர்,

ஜே.உசைனுதீன், கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் பிர்னாஸ் இஸ்மாயில், கிழக்கு மாகாண சுதேச தினைக்களத்தின் ஆணையாளர் ஆர். ஸ்ரீதர் ஆகியோர்களுக்கு வழங்கி வைப்பதையும், கடந்த சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக வேண்டி 2 நிமிட அஞ்சலியுடன் விஸேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தி வைக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

படம் – பைஷல் இஸ்மாயில்

n n-jpg2 n-jpg2-jpg3

Web Design by The Design Lanka