கிழக்கில் இருந்து சவூ­திக்கு அதி­க­மான மீன்­களை ஏற்­று­மதி செய்ய வேண்டும். ஜாபர் ஸஹீ. - Sri Lanka Muslim

கிழக்கில் இருந்து சவூ­திக்கு அதி­க­மான மீன்­களை ஏற்­று­மதி செய்ய வேண்டும். ஜாபர் ஸஹீ.

Contributors

சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை கிழக்கு மாகாணத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்குரிய சகல
வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என தனியார் மீன்பிடி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பொறியியலாளர் மொஹமட் அல் ஜாபர் ஸஹீ தெரிவித்தார் .
திருகோணமலை , சீனன்குடா மீன்பிடி நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
அவர் மேலும் கூறுகையில் ,
புதிய தொழில் நுட்ப வசதிகளையும் மீன் பிடி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களையும் குறிப்பாக சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார் .
மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறுகையில் , சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமுள்ள வர்த்தக உறவினை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்ற முடியும் . மீன்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மீன்வர்களின் வறுமை நிலையினை குறைக்க முடியும் எனக் கூறினார் .

Web Design by Srilanka Muslims Web Team