கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் இன்று அரசாங்கத்தின் தரிசு நிலங்களாக மாறிவிட்டன - ஹசன் அலி - Sri Lanka Muslim

கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் இன்று அரசாங்கத்தின் தரிசு நிலங்களாக மாறிவிட்டன – ஹசன் அலி

Contributors

வடக்கின் உற்­பத்தி திட்­டங்­களில் அப்­ப­குதி மக்­களே அதிகம் உள்­வாங்­கப்­பட வேண்டும். கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட நிலைமை வடக்கு தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்­டு­விடக் கூடா­தென முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­துள்­ளது.

உற்­பத்தி திட்­டத்தின் பின்­ன­ணியில் சிங்­களக் குடி­யேற்­றங்­களே இருக்­கு­மெனின் அதற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. இவ் விட­யத்தில் எச்­ச­ரிக்­கை­யாக செயற்­ப­டு­வதே அவ­சியம் எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் செய­லாளர் ஹசன் அலி தெரி­விக்­கையில். வட மாகா­ணத்தில் கரும்பு உற்­பத்தி திட்­டத்­தினை அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. அபி­வி­ருத்தி திட்­டத்தின் கீழ் வடக்கில் 71.716 ஹெக்­டெயர் காணி­களை அர­சாங்கம் பெற்­றுக்­கொள்ள தீர்­மா­னித்­துள்­ளது.

வடக்கில் இவ்­வா­றா­ன­தொரு திட்­டத்­தினை செய்­வ­தாயின் வடக்கு மக்­கள் அதி­க­ளவில் உள்­ளக்­கப்­பட வேண்டும். அவர்­களின் காணி­களை வாங்கி வேறு பகு­தி­யினர் பயிர்­செய்­கை­களை செய்­யக்­கூ­டாது.

கிழக்கில் முஸ்லிம் மக்­களின் நிலங்­களில் கரும்பு உற்­பத்­தி­களை மேற்­கொண்டு இன்று அவை அர­சாங்­கத்தின் தரிசு நிலங்­க­ளாக மாறி­விட்­டது. சிங்­க­ள­வர்­களை வைத்து விவ­சா­யங்­களை மேற்­கொண்­டனர். இதனால் கிழக்கில் உள்ள பெரும்­பா­லான முஸ்­லிம்கள் பாதிக்­கப்­பட்­ட­தோடு இன்று வரையில் அவர்­க­ளுக்­கான தீர்வோ அல்­லது முஸ்­லிம்­களின் நிலங்­களோ கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

இதே நிலைமை வடக்­கிலும் ஏற்­பட்டு விடக்­கூ­டாது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நிலப்­ப­ரப்­பு­களில் அர­சாங்கம் பயிர்­செய்­கை­களை செய்­வ­தென்­பது அர­சாங்­கத்தின் திட்­ட­மாக இருக்­கலாம். ஆனால் அப்­ப­குதி மக்கள் அந்த நிலங்­களை நம்­பியே வாழ்­கின்­றனர் என்­பதை அர­சாங்கம் மறந்து விடக்­கூ­டாது.

இன்று வடக்கில் ஏரா­ள­மான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. முதலில் அவற்­றிற்­கான தீர்­வு­களை அர­சாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். அதே போல் அவர்­க­ளுக்­கான அபி­வி­ருத்­தி­க­ளையும் அர­சாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்­டிய கடமை உள்­ளது. அதே போல் இவ் அபி­வி­ருத்தி திட்­டங்­களின் பின்­னணி என்­ன­வென்­ப­தையும் புரிந்­து­கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கில் இவ்­வா­றான வேலைத் திட்­டங்­களை செய்து சிங்­களக் குடி­யேற்­றங்­களை ஏற்படுத்த அர­சாங்கம் முயற்­சிக்குமாயின் உடனடியாக அவற்றை தடுத்து நிறுத்த வேணடும். வடக்கு கிழக்கில் மட்­டுமே இன்று சிறு­பான்மை ஆதிக்கம் காணப்­ப­டு­கின்­றது.

இங்கு மட்­டுமே எமது உரி­மை­களை செயற்­ப­டுத்த குரல் கொடுக்க முடி­யு­மா­கவும் உள்­ளது. எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் எமது பிரதி நிதித்துவத்தை இழக்கும் வகையில் அரசாங்கம் செற்படக் கூடாது.

இவ் வியத்தில் வடக்கின் அரசியல் தலைமைகளும் மக்களும் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். தமது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team