கிழக்கு அபிவிருத்தி மன்றம் அங்குரார்ப்பணம் - Sri Lanka Muslim

கிழக்கு அபிவிருத்தி மன்றம் அங்குரார்ப்பணம்

Contributors

(பி.எம்.எம்.ஏ.காதர்)

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை பிரதேச செயலகப்பிரிவுக்கான  ‘கிழக்கு அபிவிருத்தி மன்றம்’ அங்குரார்ப்பணக் கூட்டமும் பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும் இன்று மாலை (28-08-2014) கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி. தலைமையில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மகநெகும தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க கலந்து கொண்டார்.

 

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேசத்திற்கான  அபிவிருத்தி தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த நிகழ்வில் மருதமுனை, நற்;பிட்டிமுனை, கல்முனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கல்முனை மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஜே.பி மருதமுனை கடற்கரை வீதியை வாகனத் தரிப்பிட வசதியுடன் காபட் வீதியாக நிர்மானிப்பதற்கு முன்மொழிந்தார்  கலந்தரையாடலின் இறுதியில் வர்த்தகர் ஏ.ஜே.எல்.அசீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட  மகநெகும தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான கிங்ஸ்லி ரணவக்க அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பிரதம அதிதி கடற்கரை வீதியையும் பார்வையிட்டார்.

 

23 24 25 26 27

Web Design by Srilanka Muslims Web Team