கிழக்கு ஜப்பானைத் தாக்கியது விஃபா புயல்! - Sri Lanka Muslim

கிழக்கு ஜப்பானைத் தாக்கியது விஃபா புயல்!

Contributors

டோக்கியோ: ஜப்பானின் கிழக்குக் கரையோரப் பகுதியைச் சக்தி வாய்ந்த விஃபா புயல் தாக்கியதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 50 பேரைக் காணவில்லை.

டோக்கியோவுக்கு தெற்கே உள்ள இஸு ஒஷிமா தீவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மண் சரிவுகளும் வெள்ளப் பெருக்கும் அங்கு ஏற்பட்டுள்ளன. பல வீடுகளின் மேல் மண்மேடுகள் சரிந்து விழுந்து மூடியுள்ளன.

முன்னர் சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த ஃபுகுஷிமா அணு உலையைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்தப் புயலால் அதற்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

டோக்கியோவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் தடைபட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் டோக்கியோ பகுதியை ஊடறுத்துச் சென்ற மிக மோசமான சூறாவளி இதுவென்று ஜப்பானின் வளிமண்டலவியல் அதிகாரிகள் கூறினர்.

விஃபா புயல் தற்போது வலுவிழந்து சாதாரண புயலாக மாறி வடக்கு கிழக்கு பகுதிக்குள் ஊடுறுவியுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team