கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் » Sri Lanka Muslim

கிழக்கு பல்கலைக்கழகத்துடன் கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தம்

Contributors

கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடற்படையி னருக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி கே. கோபிந்த ராஜாவும் இலங்கைக் கடற்படையின் பிரதிநிதியான பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.யுகே.வி. பண்டார ஆகியோரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு வந்தாறுமூலை வளாகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது. முகாமைத்துவம் சம்பந்தமான கற்கை நெறிக்கு கிழக்குப் பல்கலைக்கழ கத்திற்கு விரிவுரையாளர்களை வழங்குதல் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல் போன்ற இருதரப்பினருக்கும் பயன்தரக்கூடிய ஒப்பந்தமாக இது அமை யுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோண மலையிலுள்ள கடற்படை தளத்தில் இப்பயிற்சி நெறி நடத்தப்படவுள்ளது. அடுத்த இரு வருடங்களுக்குச் செயற்படத்தக்கதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இருதரப்பு உடன்பாட்டிற்கமைவாக நீண்டகால செயற் பாட்டிற்கும் ஏதுவாக அமையும். கடற் படையினரின் பதவியுயர்விற்கு துணை புரியும் இப்பயிற்சி நெறி கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மூலமாக வழங்கப்பட்டது.(tk)

Web Design by Srilanka Muslims Web Team