கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை » Sri Lanka Muslim

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை

school1

Contributors
author image

ABDUL SALAM YASEEM - TRINCO

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தேசிய பாடசாலைகள் தொடர்பில் மத்திய கல்வி அமைச்சே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

வழங்கப்படும் இந்த விடுமுறைக்கான பாடசாலை நாள் எதிர்வரும் 21ம் திகதி நடாத்தப்பட வேண்டுமெனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை போயா தின விடுமுறை வௌ்ளிக்கிழமை வேலை நாள் பின்னர் மீண்டும் சனிக்கிழமை தைப்பொங்கள் மற்றும் ஞாயிறு விடுமுறை வருகின்றது.இதனால் இந்துக்களுக்கு ஏற்படும் அசளகங்கரியங்களை கருத்திற்கொண்டு பல்வேறு தரப்பினரும் விடுத்த வேண்டுகோளையடுத்து மாகாண கல்வி அமைச்சு விஷேட விடுமுறை தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது

Web Design by The Design Lanka