கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரினால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரினால் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

Contributors
author image

எம்.ஏ.றமீஸ்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்களை கைளிக்கும் நிகழ்வு  அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அதிபர் மௌலவி வி.ரி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அதிபரிடம் விளையாட்டு உபகரணங்களை கையளிப்பதையும் அருகில் பிரதி அதிபர்களான ஏ.எல்.அன்வர், எஸ்.எல்.எம்.நசீர், ஏ.கே.நியாஸ், எம்.சி.சரீனா உம்மா மற்றும் உதவி அதிபர்களான ஏ.எல்.ஏ.பத்தாஹ், எம்.ஏ.அபுதாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள சில பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறான விளையாட்டுத் துறை உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 இவ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் அடுத்து வரும் தனது நிதி ஒதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு ரூபா ஐந்து இலட்சம் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார்.

 

05

 

06

 

07

 

08

Web Design by Srilanka Muslims Web Team