கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பாராட்டு ! - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் பள்ளிவாசல்கள் சம்மேளனம் பாராட்டு !

Contributors

நூருல் ஹுதா உமர்

வேகமாக பரவிவரும் கொவிட் 19 கொரோணா பரவல் நிலைமைக்கு மத்தியில் அதனை கட்டுப்படுத்துவதற்காக  அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுடன் தடுப்பூசியை பெறுவதிலும் முன்னின்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் அவர்களின் சேவையை பாராட்டி அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஏ ஆர் அப்துல் அஸீஸ் தலைமையிலான சம்மேளனத்தினர் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நிந்தவூரில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ ஆர் எம் தௌபீக் க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் ஏ ஆர் அப்துல் அஸிஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எல்.அன்வர்டீன், பொருளாளர் எஸ்.எம். சபீஸ், நிந்தவூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே எல் நக்பர் உட்பட ஜமியத்துல் உலமா சபையினர் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

Web Design by Srilanka Muslims Web Team