கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் நியமனம்! - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளர் நியமனம்!

Contributors

கிழக்கு மாகாண புதிய பிரதம செயலாளராக டி.எம்.எல்.பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை, திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் வைத்து சமயத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன், உத்தியோகபூர்வமாக இன்று (07) ஆரம்பித்தார்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாடிகோராள மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான டி.எம்.எல்.பண்டாரநாயக்க, இதற்கு முன்னர் அம்பாறை மாவட்டச் செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team