கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால்    விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது..! - Sri Lanka Muslim

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால்    விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது..!

Contributors

எப்.முபாரக் 

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால்   இன்றையதினம்(30)   விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. நாளைய தினம் (31) கொண்டாடப்படவுள்ள இலங்கைத்திருநாட்டின் விளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர்   தலைமையில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  அலுவலகத்தின் முன்னால் விளையாட்டு உடற்பயிற்சிகள்    இடம்பெற்றன.

தேசியக்கொடிகள்  ஏற்றப்பட்டு விளையாட்டுகள் நிகழ்வுகள் நடைபெற்றன.   விளையாட்டு தினம் தொடர்பிலும் போசனை கூறுகளின் அவசியம் குறித்தும் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பிலும் கருத்துரைகள் இடம்பெற்றன.நிகழ்வின் இறுதியாக அலுவலர்கள் உடற்பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.   

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

 இலங்கைக்கு முதலாவது ஒலிம்பிக் பதக்கம் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க நாள் நாளைய தினமாகும்.

1948 ஆம் ஆண்டு, (31-07-1948) ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டப்போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்டு, மேஜர் தேசமான்ய டங்கன் வைட் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தடகளப் போட்டிகளில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதலாவது இலங்கையர் மற்றும் தெற்காசியவர் இவரே ஆவார்.

இலங்கை விளையாட்டு வீரரும், படை வீரருமான இவர் பின்நாட்களில் இலண்டனில் நிரந்தரமாக குடியேறியதோடு,  1998ஆம் ஆண்டு காலமானார்.

இவருக்குப் அடுத்ததாக, இலங்கையைச் சேர்ந்த சுசந்திகா ஜயசிங்க, 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team