கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் » Sri Lanka Muslim

கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

najeeb1.jpg2

Contributors
author image

அஷ்ரப் ஏ சமத்

 

ஊடகஅறிக்கை
கிழக்குமாகாண சபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக புதிதாகதோன்றியிருக்கின்ற நெருக்கடியைக் கவனத்திற் கொண்டு,அக்கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பது சம்மந்தமாக பொதுஜன ஐக்கிய முன்னனிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையைத் தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு ஏதுவானவகையில் தலையீட்டைமேற்கொள்ளுமாறு கிழக்குமாகாண சபை முதலமைச்சர் எம். நஜீப் அப்துல் மஜீத், ஜனாதிபதி மைத்திரிபாலசிறி சேனவிடமும்,பொதுஜன ஐக்கியமுன்னனியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிடமும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 
மேற்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் தனதுமுதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் மூன்றுமாதங்களே இருக்கும் நிலையில்,ஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்தில் செயற்படுவதற்குதான் தயாராக இருப்பதாகதெரிவித்துள்ளஎம். நஜீப் அப்துல் மஜீத் தானும் பொதுஜன ஐக்கியமுன்னனியின் செயலாளரும் இணைந்து ஜனாதிபதியுடன் மேலும் பேச்சுவார்த்தைநடாத்துவதற்கானசந்தர்ப்பத்தைஏற்படுத்துமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக பொதுஜன ஐக்கியமுன்னனியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அவர் அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அவர் அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது:

 

ஜனாதிபதித் தேர்தலின் பின் புதியமத்திய அரசுதோற்று விக்கப்பட்டுள்ள நிலையில்,’கிழக்குமாகாண சபையில் ஆட்சிமாற்றம்’ சம்பந்தமாக அச்சபையில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுக்கிடையில் பேச்சுவரர்த்தைகள் ஆரம்பிக்கப்டடிருப்பதை ஊடகங்கள் வாயிலாகஅறியமுடிகிறது.

 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தலைவரும் அதன் செயலாளரும் எதிரெதிராகபோட்டியிட்டு, இறுதியில் அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தலைவராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ள மேன்மைதாங்கிய மைத்திரிபாலசிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

இரு தரப்பாக தேர்தலில் பிரிந்து செயற்பட்ட ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதுடன்,கட்சியின் ஒற்றுமைபாதுகாக்கப்பட்டுஅதன் வலிமையும் அதிகரித்துள்ளது.

 

ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மூதூர் தேர்தல் தொகுதிஅமைப்பாளருமாகி நான், 2012ல் நடைபெற்ற கிழக்குமாகாண சபைக்கானதேர்தலின் பின் அமைக்கப்பட்ட  ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சியின் தலைமையிலான,பொதுஜன ஐக்கியமுன்னணியின் கிழக்குமாகாண சபை ஆட்சியில் முதலமைச்சராகநியமிக்கப்பட்டேன்.

 

மத்திய அரசாங்கத்தில் பொதுஜன ஐக்கியமுன்னணியின் பங்காளியாகஅப்போதிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் முதல் இரண்டரைவருடங்களுக்கு ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக்கும்,மிகுதி இரண்டரைவருடங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் முதலமைச்சர் பதவிவழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டு,முதலில் நான் முதலமைச்சராக்கப்பட்டேன். எனது இந்த இரண்டரை வருடநியமணகாலம் முடிவடைவதற்கு 3 மாதங்களே எஞ்சியிருக்கின்றன. மேற்படிஒப்பந்தத்தின் அடிப்படையில் உரியகாலத்தில் செயற்படுவதற்குநான் தாயாராக இருக்கிறேன்.

 

இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும்,ஐக்கியதேசியக் கட்சியும் கிழக்குமாகாணசபையின் ஆட்சியைமாற்ற வேண்டும் என்றமுடிவில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகஅறியமுடிகிறது.

 
நமது இன்றைய ஜனாதிபதியும், ஸ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபாலசிறிசேனஅவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏனைய கட்சிகளுடன் செய்துகொண்டஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் மிக நேர்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதை வெளிப்படுத்தியருக்கிறார்.

 

ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் செய்து கொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தவுதற்கு முன்பு,தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,ஐக்கியதேசியக் கட்சியும் கிழக்குமாகாணசபையில் ஆட்சிமாற்றத்திற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

 

இவ்வாறான ஒரு நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கின்ற நிலையில் கிழக்குமாகாண சபையில் ஆட்சி அமைப்பது சம்பந்தமாக ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்ற உடன்படிக்கையை தொடர்ந்தும் செயற்படுத்துவதற்கு,புதிய இந்தநெருக்கடிகள் தடையாக இருக்கின்ற காரணத்தினால்,கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்றவகையிலும்,பொதுஜன ஐக்கிய முன்னணியின் முதலமைச்சர் என்றவகையிலும் இவ்விடயத்தில் தங்களதுதலையீட்டைக் கோருகிறேன்.

 

கிழக்கு மாகாண சபையின் புதியநெருக்கடி சம்பந்தமாக மேன்மைதாங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஅவர்களுக்கு தெரியப்படுத்துமாறும் இவ்விடயம் சம்பந்தமாக நீங்களும் நானும் ஜனாதிபதிஅவர்களைசந்தித்துப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறும் தாங்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

Web Design by The Design Lanka