கீதா குமாரசிங்கவுக்கு எதிரான சத்தியாக் கிரகம் நிறுத்தப்பட்டது - Sri Lanka Muslim

கீதா குமாரசிங்கவுக்கு எதிரான சத்தியாக் கிரகம் நிறுத்தப்பட்டது

Contributors

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பெந்தரை- அல்பிட்டிய அமைப்பாளர் பதவியிலிருந்து கீதா குமாரசிங்கவை நீக்குமாறு கோரி தென் மாகாண சபை உறுப்பினர் அஜித் பிரசன்ன உள்ளிட்ட தென்பகுதி அரசியல்வாதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்று அல்பிட்டிய பஸ் நிலையத்தின் முன்பாக தொடர் சத்தியாக்கிர போராட்டத்தில் குதித்தனர். பெந்தரை- அல்பிட்டிய அமைப்பாளர் பதிவியிலிருந்து கீதா குமாரசிங்கவை நீக்குமாறு கோரிய இவர்கள், லொரியொன்றில் ஏறி தமது காட்டினர்.

அதன்போது அவ்விடத்திற்கு வந்த தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் இது தொடர்பாக தாம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும்,  இது விடயத்தில் ஜனாதிபதி நடவடிக்கவிருப்பதாகவும் கூறி சத்தியாக்கிரக போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.(lanv)

Web Design by Srilanka Muslims Web Team