கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேண்டாம் - அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்..! - Sri Lanka Muslim

கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடவேண்டாம் – அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்..!

Contributors

கண்டி மாவட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமான கூட்டத்தின் பின்னர் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மேல் மாகாணத்தை தொடர்ந்து ஏனைய மாகாணங்களிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஸ்புட்னிக் V முதலாவது தடுப்பு மருந்து முழுமையாக கண்டி மாவட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரம் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் விரைவில் நாட்டுக்கு கிடைக்க உள்ளது. மேலும் ஒரு மில்லியன் தடுப்பூசிகள் அடுத்த மாத முற்பகுதியில் பகுதியில் கிடைக்க உள்ளது. மேல் மாகாணத்தின் பின்னர் கண்டி மாவட்டமே கூடுதலான ஆபத்தை சந்தித்துள்ளது. நாட்டுக்கு தேவையான கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய பணம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது.

உலகம் முழுவதிலும் நிலவும் கேள்விக்கு ஏற்ப தடுப்பூசியை உற்பத்தி செய்யாமையே சிக்கலுக்கான காரணமாகும். இதுவரை எதுவித தடுப்பு மருந்தும் கிடைக்கப்பெறாத 51 நாடுகள் காணப்படுகின்றன.

தடுப்பூசியை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை என கூறி சிலர் போலி கருத்துக்களை முன்வைக்கின்றனர். கொவிட் தடுப்பு நடவடிக்கையை அரசியலுடன் சம்பந்தப்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நெருக்கடி மிக்க சந்தர்ப்பத்தில் அவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team