குஜராத்தில் இரு குழுகளிடையே மோதல்: 3 பேர் பலி - பல வீடுகள் தீக்கிரை - Sri Lanka Muslim

குஜராத்தில் இரு குழுகளிடையே மோதல்: 3 பேர் பலி – பல வீடுகள் தீக்கிரை

Contributors

குஜராத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
கர்படா தாலுக்கா, கஜூரியா கிராமத்தில் வசிக்கும் இரு பிரிவினருக்கு இடையே நெடுங்காலமாக தீராத பகை நீடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை திடீரென்று ஒரு கும்பல் எதிர் பிரிவினர் வசிக்கும் பகுதிக்கு சென்று பயங்கரமான ஆயுதங்களால் அங்குள்ளவர்களை தாக்கியது. சுமார் 20 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தாக்குதலில் காயமடைந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவம் பற்றிய தகவலறிந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், பொலிஸ் வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தன.

ஆனால், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆவேசத்துடன் கற்களை வீசி தாக்கியதால் சுமார் ஒரு மணி நேரம் வரை இந்த வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்று சேர முடியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு பின்னர் ஊருக்குள் நுழைந்த பொலிஸார் இரு தரப்பையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

காயமடைந்த மேலும் 4 பேரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team