குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு;பொலிஸார் கைது - Sri Lanka Muslim

குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு;பொலிஸார் கைது

Contributors
author image

Editorial Team

குடிபோதையில் குழப்பம் விளைவித்த பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

அம்லாந்தோட்ட ரிதியாகம சியம்பலாகஸ்வௌ பிரதேசத்தில் வைத்து குறித்த பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

குடிபோதையில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் கூச்சலிட்டுக் கொண்டு குழப்பம் விளைவித்ததாக பௌத்த பிக்கு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

குறித்த பௌத்த பிக்கு வீதியில் வாகனப் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அம்பலாந்தோட்ட கசாகல விஹாரையின் பௌத்த பிக்குவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பௌத்த பிக்கு நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்ட போது அவருக்கு நீதவான் 2500 ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.(LW)

Web Design by Srilanka Muslims Web Team