குருக்கள் மடத்தில் குதறிய நாள் » Sri Lanka Muslim

குருக்கள் மடத்தில் குதறிய நாள்

kurukkal

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


தெருக்கள் எங்கும் செய்தி
தீயாகிப் பரவியது
குருக்கள் மடத்தில் கடத்திக்
கொன்று போட்டான்களாம்

விடுதலை என்ற பெயரில்
தறுதலைக் கூட்டம் செய்த
கொடூர பேயாட்டத்தில்
குருக்கள் மடமும் ஒன்று

வாப்பா வருவாரென்று
வாசல்நின்ற குழந்தையிடம்
பேச முடியாமல் தவித்து
பிள்ளையின் தாய் அழுத நாள்

அப்பாவி இவர்கள் என்று
அறிந்தும் கொடியவர்கள்
துப்பாக்கி முனையில் செய்த
துரோகத்தின் நினைவு நாள்

பொருட்களை கொள்ளையிட்டு
பொதுமக்களை தள்ளிச் சென்று
பொறுக்கிகள் போல சுட்டார்
பொறுக்காது எவரின் மனமும்

எத்தனை அழுகைகள்
எத்தனை சாபங்கள்
அத்தனையும் பலித்தன
அப்புறம் நந்திக் களப்பில்

அம்பலாந்துறையில் தேடி
அகழ்ந்து பார்த்தால் தெரியும்
அம்பலாமாகும் அன்று
அரங்கேற்றிய அரக்கத்தனம்

இன்னும் அழுகின்றன
எத்தனை கண்கள் நினைத்து
என்றும் மறவாதிந்த
ஈனர்கள் செய்த செயல்.

Web Design by The Design Lanka