குருணாகலில் பெண் ஒருவருக்கு கொரோணா தொற்று இனங்காணப்பட்டது..! » Sri Lanka Muslim

குருணாகலில் பெண் ஒருவருக்கு கொரோணா தொற்று இனங்காணப்பட்டது..!

Contributors
author image

Editorial Team

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநாகல் ஐ சேர்ந்த 78 வயது பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் மினுவங்கொட Brandix ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார், இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் இதனால் அவரது தாயாருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கொரோனா அறிகுறிகளுடன் சந்தேகிக்கப்படும் 20 பேர் தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் இதுவரை 5 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka