குருநாத் மெய்யப்பன் தொடர்பாக தவறாக எழுதினேன்: மைக்கல் ஹசி - Sri Lanka Muslim

குருநாத் மெய்யப்பன் தொடர்பாக தவறாக எழுதினேன்: மைக்கல் ஹசி

Contributors

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைக்கொண்டு நடாத்தும் பொறுப்பை என்.ஶ்ரீனிவாசன் தனது மருமகனான குருநாத் மெய்யப்பனிடம் வழங்கினார் எனவும்  குருநாத் மெய்யப்பனே அணியைக் கொண்டு நடாத்தினார் எனவும் தனது சுயசரிதைப் புத்தகத்தில் எழுதியமை தவறாக இருக்கலாம் என மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற அவுஸ்ரேலியரான மைக்கல் ஹசிஇ சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார். அண்மையில் தனது சுயசரிதைப் புத்தகத்தில் அவர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாகத் தெரிவித்திருந்தார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை என்.ஶ்ரீனிவாசனின் நிறுவனமான இந்தியன் சீமெந்து நிறுவனமே உரிமைப்படுத்தியிருந்ததாகவும் என்.ஶ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னணிப் பொறுப்பில் காணப்பட்டமையால் அணியை நடத்தும் பொறுப்பை அவர் குருநாத் மெய்யப்பனிடம் வழங்கியதாகவும்  எனவே அணியை குருநாத் மெய்யப்பனும் அப்போதைய பயிற்றுவிப்பாளருமான கெப்லர் வெசல்ஸும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியைக் கொண்டு நடத்தியிருந்ததாகவும் மைக்கல் ஹசி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மைக்கல் ஹசிஇ தான் புத்தகத்தில் எழுதிய விடயம் தொடர்பாக என்.ஶ்ரீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்ததாகவும்  குருநாத் மெய்யப்பன் தொடர்பாக தான் தவறாக எழுதியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

குருநாத் மெய்யப்பன் அணியோடு நெருக்கமாகக் காணப்பட்டார் எனவும் பயிற்சிகளின் போதும்இ அணி தங்கியிருந்த ஹோட்டல்களிலும் அவர் அங்கு காணப்பட்டார் எனவும் பயிற்சியாளரிடமும் வீரர்களிடமும் அவர் கதைத்தார் எனவும் குறிப்பிட்ட மைக்கல் ஹசி, ஆனால் குருநாத் மெய்யப்பனுக்கு என்ன பதவி காணப்பட்டது என்பது தொடர்பாகத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team