குர்ஆனைப் படிக்கும் பொப் இசைப் பாடகி! - Sri Lanka Muslim
Contributors

1377948_357987984335936_542926872_n

(Hisham Hussain)

உலக புகழ்பெற்ற அமெரிக்க பொப் இசைப் பாடகி மடோனா (Madonna) புனித குர்ஆனைக் கற்பதாகவும் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கான கல்லூரிகளை நிருமாணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் AFP செய்திசேவைக்கு ஒக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை வழங்கிய செவ்வியலில் குறிப்பிட்டிருந்தார். மேலும், ‘அனைத்து புனித நூல்களையும் படிப்பது அவசியம் என நான் நினைக்கின்றேன்’ என்றும் கூறினார்.

55 வயது பாடகி மடோனாவின் இஸ்லாம் மீதான ஆர்வம் அல்ஜீரிய வம்சாவளி முஸ்லிம் பிராஹிம் சாய்பத் (Brahim Zaibat)தைக் காதலிக்க ஆரம்பித்த நாளிலிருந்து வெளிப்படத் துவங்கியுள்ளது. துருக்கியில் தலையை மூடியவாறு சாய்பத்துடன் பள்ளிவாசலுக்குள் செல்லும் புகைப்படமொன்று சென்ற வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மட்டுமல்லாமல், புகைப்படப்பிடிப்பு ஒன்றின் போது எடுக்கப்பட்டு, முகநூல் வாயிலாக பகிரப்பட்ட, நிகாப்பைப் போன்ற தோற்றம்கொண்ட முகக் (போர்) கவசம் அணிந்த புகைப்படத்தில் எழுதப்பட்டிருந்த வாசகம், பாடகி மடோனாவின் மன மாற்றம் குறித்து வினாக்களை எழுப்பியுள்ளது.

அந்த வாசகம் இதுதான்: ‘அன்பின் புரட்சி …..மீதுள்ளது, இன்ஷாஅல்லாஹ்’ (“The Revolution of Love is on….. Inshallah”)

 

 

Web Design by Srilanka Muslims Web Team