“ குறுகிய கால வரலாற்றில் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனைகள் வியக்கத் தகுந்தவையாகும். “ » Sri Lanka Muslim

“ குறுகிய கால வரலாற்றில் பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனைகள் வியக்கத் தகுந்தவையாகும். “

BA

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

காலி கூட்டுறவு இருதய சிகிச்சை நிலைய பணிப்பாளர் டாக்டர் ரிப்கான் அவர்கள் தமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள். .

பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் கடந்த ஒன்பது வருட சாதனைகளை கொண்டாடுமுகமாகவும் 2017 ம் ஆண்டு க பொ த (சா/த) வரலாற்று புகழ் மிக்க பரீட்சை பெறுபேறுகளை கௌரவிக்கும் முகமாகவும் ஏற்பாடு செய்யப் பட்ட “ சிறகடிக்கும் சிட்டுக்கள் “ நிகழ்வில் விஷேட அதிதியாக காலி கூட்டுறவு இருதய சிகிச்சை நிலைய பணிப்பாளர் டாக்டர் ரிப்கான் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்ட டாக்டர் ரிப்கான் அவர்கள், புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ள க பொ த (உ /த ) விஞ்ஞான பிரிவின் பிரத்தியேக வகுப்பாசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுக்காக ரூ ஒரு இலட்சத்து என்பதாயிரத்தினை ( காசோலையை ) கையளித்த போது.

டாக்டர் ரிப்கான் அவர்கள் தனது முக நூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்துள்ள பதிவில் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது , “ புகழ் அனைத்தும் இறைவனுக்கே ,பதுளை பாத்திமா மகளிர் கல்லூரியின் “சிறகடிக்கும் சிட்டுக்கள்” நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக , ஒவ்வொரு பிரதேசத்திலும் இயங்க வேண்டிய முன்மாதிரி அமைப்பான UCMC உடன் இணைந்து என்னை விஷேட அதிதியாக அழைத்தமையை மிகவும் நன் மதிப்புடன் ஏற்றுக் கொள்கின்றேன்.

கல்லலூரி அதிபர் எம் ஏ ஹைருன் நிஷா அவர்களுக்கு (சா/த ) மாணவிகளின் சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப் பட்ட போது.
பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வரலாற்றை நன்கு தெரிந்தவன் என்ற வகையில் என்னுடைய சில கருத்துக்களை பெருமையுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன் .

இறைவனின் பேரருளால் கடந்த 2017 சாதாராண தர பரீட்சையில் 100 % பெறுபேறுகளை பெற்று ,சுமார் பத்துவருட குறுகிய காலத்திற்குள் பாரியதொரு சாதனையை படைத்துள்ளது.

இச்சாதனையின் பின்னணியில் பாடசாலை அதிபரினதும் கல்லூரியின் ஆசிரியர்களினதும் , இன்று தமது திறமைகளுடன் முன்னணியில் திகழும் மானவிகளினதும் உழைப்பும் பின்னணியில் இருந்துள்ளது. தம் கல்வித் திறமைகளால் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்திருந்த மாணவிகளின் பெற்றார்கள் தாம் வழங்கக் கூடியதில் சிறப்பானதையே தம் பிள்ளைகளுக்கு வழங்கி இருந்தார்கள்.

அதிபரிலிருந்து புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர் வரைக்கும் எந்த வித பதவி பாகுபாடுகள் இல்லாமல் மிகவும் அன்யோன்யமாக ஓரணியில் செயற்படுவதையும் , மாணவிகளின் திறமைகளை வெளிகொணர்ந்து தேசிய மட்ட தரத்திலான நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள் என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மிகவும் சிரமத்துடன் பயிற்றுவிக்கப் பட்டு மேடையேற்றப் பட்ட நிகழ்சிகள் தேசிய தரம்வாயிந்ததாக அமைந்திருததை கண்டும் மாணவிகளின் திறமைகளை கண்டும் அரங்கிலிருந்த பார்வையாளர்கள் அனைவரும் மௌனித்து போயிருந்ததை காணக் கூடியதாக இருந்தது. அல் ஹம்துலில்லாஹ்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நான் உறுதியாக நம்புகின்றேன் . இறைவனின் நாட்டத்தால் இனிவரும் காலங்களில் இக்கல்லூரி வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் , சட்டத்தரணிகளையும் ,கணக்கியலாளர்களையும் துறைசார்ந்தவர்களையும் உருவாக்கி எம் சமூகத்தின் மத்தியிலும் எமது ஊரிலும் பாரியதொரு அலையை தோற்றுவிக்கும் என்பது உறுதியே.

மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் , மற்றும் அங்கத்தினர்களின் உழைப்பையும் அவர்களின் நேரகாலத்தையும் இப் பாடசாலைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒதுக்கி அல்லாஹ்வின் பொறுத்தத்தை நாடி முழு நேர உழைப்பாளர்களாக செயற்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். அல்லாஹ் அவர்களுக்கு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் நற்கூலியையும் தரவேண்டும்.

இனி வரும் காலங்களில் தமது பெண் பிள்ளைகளின் உயர் கல்வியை நாடி பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியை நோக்கி வெளிப் பிரதேசத்தவர்கள் படையெடுத்து வருவார்கள் என்பதை இம்மாணவிகளின் சாதைனை மிக்க பெறுபேறுகளும் , இவர்களின் திறமைகளும் சாட்சி கூறுகின்றன.

இந்த கல்லூரி அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகளுக்கும் UCMC அங்கத்தினர்களுக்கும் வல்ல அல்லாஹ் அவனின் எல்லையற்ற கருணையை பொழிவானாக என்று வேண்டுவதுடன், இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக எமது விஷேட துஆ பிரார்த்தனையும் உதவிகளும் என்றைக்கும் உண்டு என்றும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மொழி பெயர்ப்பு :- எம் பி செய்யத் முஹம்மது
தொடரி :- https://www.facebook.com/rif.khan.9

BA BA.jpg2 BA.jpg3

Web Design by The Design Lanka