குறுஞ் செய்தியால் மன அழுத்தம்: 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு - Sri Lanka Muslim

குறுஞ் செய்தியால் மன அழுத்தம்: 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Contributors

செல்லிடப் பேசி குறுஞ் செய்தியினால் ஒருவருக்கு மன அழுத்தத்தை கொடுத்தமை தொடர்பில் 10 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக செலுத்துமாறு கல்கிஸ்சை மேலதிக நீதவான் பிரபர்ஷா ரணசிங்க நிறுவனம் ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சந்திரசேகர விஜேதிலக்க என்ற நபர் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

தனது செல்லிடப் பேசி அனுப்பப்பட்ட குறுஞ் செய்தியால் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக முறைப்பாட்டில் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து அந்த குறுஞ் செய்தி அனுப்பப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் நிறுவனம் ஒன்று பெண்களுக்கு ஏற்படும் சித்திரவதைகள் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் அதனை அனுப்பியிருந்தமை தெரியவந்தது.

வெள்ளவத்தை பொலிஸார் அந்த நிறுவனத்திற்கு எதிராக கல்கிஸ்சை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதவான், முறைப்பாட்டாளருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தீர்மானித்ததுடன் அதற்கான இழப்பீடாக 10 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிட்டார்.lw

Web Design by Srilanka Muslims Web Team