குளத்தில் குளிக்கச் சென்ற மாணவனைக் காணவில்லை - முதலை கவ்விச் சென்றிருக்கலாமென ஊகம் - Sri Lanka Muslim

குளத்தில் குளிக்கச் சென்ற மாணவனைக் காணவில்லை – முதலை கவ்விச் சென்றிருக்கலாமென ஊகம்

Contributors

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இத்திக் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் காணாமல் போன நிலையில் தேடுதல் இடம்பெற்று வருவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் பொலிஸ் பிரிவின் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த கலைமகள் இந்துக் கல்லூரியில் சாதாரண தரத்தில் கற்கும் கோணலிங்கம் தேனுஜன் (வயது 16) என்ற மாணவனே காணாமல் போயுள்ளார்.

இந்த மாணவனும் மற்றுமிரு நண்பர்களுமாகச் சேர்ந்து இத்திக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும்போது தேனுஜன் காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவரை முதலை கவ்விச் சென்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகின்ற நிலையில் கிராமத்து மக்களும் மீனவர்களும் கடற்படையினருமாக தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team