குளியாபிட்டிய மாணவன் ரிபாத் யூசும்தற்கொலை செய்யவில்லை. கொலையாக இருக்க வேண்டும் என மக்கள் ஆர்பாட்டம். - Sri Lanka Muslim

குளியாபிட்டிய மாணவன் ரிபாத் யூசும்தற்கொலை செய்யவில்லை. கொலையாக இருக்க வேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்.

Contributors

 

 

வாரியபொல பொலிஸ் பரிவிற்குட்பட்ட மடிகே மிதியால பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் உயிரிழந்தமை தொடர்பில் சரியான விசாரணை முன்னொடுக்கப்படாமையை கண்டித்து பொது மக்கள் வீதியில் டயர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குளியாபிடிய கல்வி வலயத்திற்கு உட்பட்ட முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் ஒருவன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் பாடசாலையில் உயரிழந்தான். அது தற்கொலை என பொலிஸார் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அது கொலையாக இருக்க வேண்டும் என மக்கள் சந்தேகிக்கின்ற நிலையில் சரியான முறையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி ரிபாத் யூசும் என்ற 18 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் சாதாரண தரத்துடன் கல்வியை இடைநிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.(mn)

 

Web Design by Srilanka Muslims Web Team