குளியாப்பிடிய பிரதேசசபையின் வேலைத்திட்டங்களை பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு » Sri Lanka Muslim

குளியாப்பிடிய பிரதேசசபையின் வேலைத்திட்டங்களை பெற்றுக் கொள்ளும் ஆரம்ப நிகழ்வு

30595027_1563581087087974_4424182005575450624_o

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-றிம்சி ஜலீல்-


குளியாப்பிடிய பிரதேச சபை உபதவி தவிசாளர் இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் ஸபீர் ஆகியோர்களினதும் பிரதேசசபை வேலைதிட்டங்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (11) குளியாப்பிடிய பிரதேச சபையில் நடைபெற்றது.

அமைச்சர் ரிஷாட்  பதியுதீனின் பணிப்புரையின்கீழ் இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளருமான எம்.என்.நஸீர் (MA) அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும் இந்த நிகழ்வில் தவிசாளர் விஜயசிரி ஏகநாயக, கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த, மாகாண சபை உறுப்பினர்களான டீபி.ஹேரத், ரிகிரி அதிகாரி, சமன் பிரிய ஹேரத், குருநாகல் நகர சபை மேயர் துசார,பிரதேச சபை செயலாளர் அப்துல் சத்தார், முன்னாள் பிரதேச சபை தவிசாலர்களான கடவெலகெதர, நரஸிங்க, உட்பட அனைத்து ஆளுங்கட்சி பிரதேச சபை உருப்பினர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடிய மத்திய குழு உறுப்பினர்கள், சர்வமதத்தலைவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

30581858_1563580197088063_2023926625829126144_o 30582228_1563580897087993_7123736514965536768_o 30595027_1563581087087974_4424182005575450624_o

Web Design by The Design Lanka