குளியாப்பிடிய பிரதேச சபையில் ACMC இல்லாமல் UNP க்கு தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல் » Sri Lanka Muslim

குளியாப்பிடிய பிரதேச சபையில் ACMC இல்லாமல் UNP க்கு தனித்து ஆட்சியமைப்பதில் சிக்கல்

party

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

றிம்சி ஜலீல்-


இலங்கையில் கடந்த 10ஆந் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சுமார் 46 இலட்சம் வாக்குகளைப் பெற்று, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில் குருநாகல் மாவட்டம் குளியாப்பிடிய பிரதேச சபைக்கான தேர்தலில், முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன 20 ஆசனங்களை கைப்பற்றி முன்னணியில் திகழ்கிறது.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 3ஆசனங்களையும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.

யானை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களுடன் இனையுமாக இருந்தால் 19 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் ஆனால் தனித்து  ஆட்சியமைக்க முடியாது.

அத்துடன் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 3 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சியின் 16 ஆசனங்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 ஆசனங்களும் இனைந்தால் மாத்திரமே குளியாப்பிடிய பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தனித்து ஆட்சியமைக்க முடியும்.

அதாவது, குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அதிக வட்டாரங்களை ஐக்கிய தேசிய கட்சி சார்பான யானைச் சின்னமும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனயும் கைப்பற்றிக் கொண்டுள்ள போதும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 ஆசனங்களும் இல்லாத நிலையில் அந்தக் கட்சிகளினால் ஆட்சியமைக்கவோ, அந்தக் கட்சிகளின் சார்பான ஒருவரை தவிசாளராக நியமிக்கவோ முடியாது என்பதுதான் தற்போதைய கள நிலைவரமாகும்.

Web Design by The Design Lanka