குளிரூட்டிய அறைகளிலிருந்து தீர்மானங்கள் எடுக்காமல் மக்களிடம் செல்வது அவசியம் - ஜனாதிபதி மஹிந்த - Sri Lanka Muslim

குளிரூட்டிய அறைகளிலிருந்து தீர்மானங்கள் எடுக்காமல் மக்களிடம் செல்வது அவசியம் – ஜனாதிபதி மஹிந்த

Contributors

நாட்டு மக்களின் நலன் குறித்து தீர்மானங்களைக் குளிரூட்டிய அறைகளுக்குள்ளி ருந்து எடுக்காமல் மக்கள் மத்திக்குச் சென்று அவர்களின் கருத்துக்களைப் பெற்று மேற்கொள்வது அவசியமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

எத்தகைய அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் அவை அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தடை யில்லாத விதத்தில் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனா திபதி; இதனைக் கருத்திற் கொண்டே சகல அரச நிறுவனங்களும் தீர்மா னங்களை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜோன் செனவிரத்ன, பஷில் ராஜபக்ஷ, நவீன் திசாநாயக்க பிரதியமைச்சர் விஜய தஹநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பி. பி. ஜயசுந்தர, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி. அபேகோன் உட்பட சகல மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி:-

மக்கள் சேவையில் ஈடுபடும் போது அரச நிறுவனங்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பே. எனினும் பெருமளவு அரச நிறுவனங்களின் சேவைகள் மிகவும் சிறந்ததென எம்மால் அறிய முடிகிறது. ஒரு சில அரச நிறுவனங்களே மக்களுக்கான சேவையை வழங்குவதில் காலந்தாழ்த்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அரச அதிகாரிகள் மத்தியில் சிந்தனை மாற்றம் அவசியம். அத்துடன் தாம் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிகளும் முக்கியமாகும்.

பிரஜைகளுக்கு சேவை செய்யும் பிரகடனங்கள் நடைமுறையில் இருந்தாலும் மக்களை அசெளகரியங்களுக்கு உற்படுத்தும் அரச அதிகாரிகளும் உள்ளனர். அவர்கள் தமக்கான பிரகடனத்தை உணர்ந்து செயற்பட அவர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டமொன்றை பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும். சாதாரண மக்களின் பிரச்சினைகள் கிராம சேவகர் ஒருவரினால் தீர்க்க முடியாவிட்டால் பிரதேச செயலாளர் மூலமோ அல்லது அதற்கு மேல் சென்று மாவட்டச் செயலாளர்கள் மூலமோ அதனை தீர்ப்பதற்கான வழிவகைகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மேற்படி பிரகடனங்கள் மூலம் மக்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய பல சேவைகள் உள்ளன. எனினும் தமக்கான உரிமைகள் தொடர்பில் மக்கள் தெளிவில்லாமல் உள்ளனர். பிரகடனங்கள் வெளியிடப்படும் போது அதில் பயன்படுத்தப்படும் வசனங்கள் எளிதானதாக மக்களுக்கு விளங்கக் கூடியதான இலகுமுறையில் அமைவது அவசியமாகும்.

அரசாங்கத்தினால் 50,000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட்டுள்ளன. எனினும் பொருத்தமானவர்கள் பொருத்தமில்லாத பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக விஞ்ஞானம், கணிதம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களை எங்கோ ஒரு பிரதேச காரியாலயத்தில் பத்திரங்களுக்கு கையொப்பமிடும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நாட்டில் விஞ்ஞான கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. பொருத்தமான பதவிகளுக்கு இத்தகையோர் நியமிக்கப்பட்டால் வெற்றிடங்களையும் ஆசிரியர்கள் குறைபாட்டையும் தடுக்க முடியும். இதில் சட்ட சிக்கல்கள் இருப்பின் அதுவிடயத்தில் கவனமெடுத்து உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆசிரியர் சேவையும் அரச சேவையே. அரச சேவை தொடர்பான கொள்கைகள் நிறைவேற்றப்படும் போது இணக்கப்பாட்டுடன் செயற்படுவது மிகவும் முக்கியமாகும். இத்தகைய பிரச்சினைகளுக்குக் கல்வியமைச்சரின் அனுமதியுடன் அமைச்சரவை மூலம் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இது தொடர்பில் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டிய போது; அரச சேவை, மாகாணமட்ட ஆசிரிய சேவை மற்றும் ஓய்வூதியம் கிடைக்கும் நியமனம் ஓய்வூதியம் கிடைக்காத நியமனம் போன்ற பல விடயங்கள் உள்ளன. இதனால் பட்டதாரிகள் இது விடயத்தில் யோசிக்கின்றனர் என தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; ஓய்வூதியம் கிட்டும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அதேவேளை அவர்களுக்கு மேலதிக சலுகைகள் கிடைக் குமானால் அதுபற்றியும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவத்தார்.

தொழில் நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை உள்ளதால் செயற்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய முடியா துள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. சில மாவட்டச் செயலாளர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

இத்தகைய பிரச்சினைகளால் அரசாங் கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தடைப் படுகின்றன. இதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். பல்கலைக்கழக அனுமதிகிடைக்காத சிறந்த சித்திபெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சியை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.(thinak)

Web Design by Srilanka Muslims Web Team