குழப்பங்களை விளைக்கும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கவும், பரீட்சை முடிவுகளை இரத்து செய்யவும் நடவடிக்கை - Sri Lanka Muslim

குழப்பங்களை விளைக்கும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கவும், பரீட்சை முடிவுகளை இரத்து செய்யவும் நடவடிக்கை

Contributors

(எம்.எம். சில்வெஸ்டர்)

கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் பரீட்சையின் இறுதித் தினத்தன்று குழப்பங்கள் விளைவித்தால் அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் பீ. சனத் பூஜித்த அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளை 10 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

பரீட்சை முடிந்தவுடன் அமைதியாக கலைந்து செல்லும்படியும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் அதற்கு அண்மித்த பகுதிகளில் குழப்பங்களை விளைவித்தல் அல்லது பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தல், அடுத்த பரீட்சார்த்திகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தல் போன்ற அநாகரீகமாக வகையில் நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்படும்.

1968 ஆம் இலக்க 25 ஆம் சரத்தின் பரீட்சைகள் சட்டத்தின்படி பரீட்சார்த்திகளின் பரீட்சை முடிவுகளை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சை மத்திய நிலையங்களுக்கு அண்மையில் பொலிஸ் காவல் அரண்களும் அமைக்கப்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team