குவைத் நாட்டு பாடகி மீது, அவதூறு கூறிய சவூதி அரேபிய இளைஞருக்கு 80 கசையடிகள் - Sri Lanka Muslim

குவைத் நாட்டு பாடகி மீது, அவதூறு கூறிய சவூதி அரேபிய இளைஞருக்கு 80 கசையடிகள்

Contributors

குவைட் நாட்டு பாடகி மீது தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் அவதூறு கூறியதற்கு சவூதி அரேபிய இளைஞருக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றம் 80 கசையடிகள், 10,000 ரியாழ்கள் அபராதத்துடன் மூன்று மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

குவைட் நாட்டு பாடகியான ஷம்ஸ் மீது சவூதி இளைஞன் சமூக இணைய தளத்தில் ஒழுக்கம் கெட்ட நடத்தையில் ஈடுபட்டதாக அவதூறு கூறியதாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஒகஸ்டிலிருந்து பிணையில் இருந்த பிரதிவாதியின் மீது மேன்முறையீட்டின் மீதே தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த இளைஞன் தனது குற்றச் சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்க தவறியதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த தண்டனை போதுமானதில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஷம்ஸின் வழக்கறிஞர், தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.(Tn)

Web Design by Srilanka Muslims Web Team